Sunday, August 23, 2015

பிரிவு(Pirivu)


தேடி கிடைக்கவில்லை இவளது சொந்தம்...
இனி தேடியும் கிடைக்போவதில்லை இவளை
போன்ற உறவு.....
பெண் நெஞ்சம் அறியாத குருடனாக இருந்த என்னை...
பெண்களின் உணர்வை புரியவைத்தாள்....
இவளை தோழி என்பதா இல்லை வாழ்வை கற்றுத்தர 
வந்த ஆசான் என்பதா???
இவளை விட்டு பிரிய எனக்கு கிறுக்கு பிடிக்கவில்லை....!!
இருந்தும் விலகி நிற்க காரணம் மீண்டும் காயப்பட்டு இவளை 
இழக்க கூடாது என்பதற்காக....!!
எத்துயரம் இவளால் நான் தாங்கிடினும் இவள் என் 
தோழி....
என் இன்னுயிர் பிரியும் வரை இவளை அன்பால் காப்பேன் 
காவலனாக...தோழனாக....!!
நட்பிற்கு வரிகள் படைப்பினும்.....என் 
கவலைகளை உள்ளே சுமக்கிறேன் ....நட்பின் 
அன்பினை குறையாமல் ஓர்... தாய்
போல்...காலங்கள் ஓடின... இவள் 
அன்பு இல்லாமல்...இருப்பினும் மீண்டும்....இவள் 
அன்பினை  எதிர்பார்த்து  காத்திருக்கிறேன்...நட்பின் 
பயணத்தை மீண்டும் தொடர ஓர்...சேய்
போல் தவிக்கிறேன் அது நடக்காமல்...நான்
நட்பின் பிரிவை எந்நாளும் எண்ணியபடி....!!

Ini thediyum kidaikavillai ivaladhu sondham...
Ini thediyum kidaikapovadhillai ivalai
pondra uravu...
Pen nenjam ariyadha kurudanaga irundha ennai....
Penngalin unarvai puriyavaithal....
Ivalai thozh enbadha illai vaazhvai katruthara
Vandha aasan enbadha??
Ivalai vittu piriya enaku kirukku pidikavillai...!!
Irundhum vilagi nirka karanam meendum kayapattu ivalai
Izhaka koodadhu enbatharkaga....!!
Ethuyaram ivalal naan thangidinum ival en
Thozhi...
En innuyir piriyum varai ivalai anbal kaapaen
Kavalanaga...Thozhanaga...!!
Natpirku varigal padaipinum....En
Kavalaigalai ullae sumakiraen...Natpin
Anbinai kuraiyamal orr..Thaii
Pol..Kalangal odina....Ival
Anbu ilamal...Irupinum meendum..Ival
Anbinai edhirparthu kathirukkiraen...Natpin
Payanathai meendum thodara or..Seii
Pol thavikiraen adhu nadakamal...Naan
Natpin pirivai ennalum enniyabadi...!!

2 comments: