பிறர் சிரிக்க நான் அழுதேன்...
அவர்களோடு நான் சிரித்தால் என்னை வெறுப்பர் ....
வேஷம் போடும் கயவர்களையும் சிரிக்க வைக்க
நான் கோமாளி வேஷம் போடுகிறேன்...!!
கள்ளம் கபடம் இல்லாத ஆள் நான்...
அதனால் தான் என்னவோ இன்று அனைவரின் முன்னே
கேலிச்சித்திரமாக போற்ற படுகிறேன்...!!
நான் அழ பிறர் சிரிக்க எனது அழுகையினை நிறுத்த முன்வந்தவர் யார்???
உள்ளத்தில் காயம் இருப்பினும் வெளியே சிரித்து அனைவரையும்
மகிழ்விக்கும் என்னை கோமாளி என அனைவரும் கூற....
இன்று என் நிழலும் என்னை பார்த்து கேலி செய்ய
தொடங்கிவிட்டது இவன் கோமாளி என்று...
என்னை பார்த்து சிரிக்க ஆள் உண்டு என்னை மகிழ்விக்க
ஆள் உண்டோ இங்கு???
என்று தினமும் தனக்குள் உரையாடல்களை நடத்தும் ஓர்,
மக்களை மகிழ்விக்கும் கலைஞனின் கூற்று....!!
Pirar sirika naan azhudhaen...
Avrgalodu naan sirithal ennai verupar....
Vesham podum kayavargalaium sirika vaika
Naan komali vesham podugiraen...!!
Kallam kabadam iladha aal naan...
Adhanal than enavo indru anaivarin munnae
Kelichithiramaga potra padugiraen...!!
Naan azha pirar sirika enadhu azhugaiyinai nirutha munvandhavar yaar???
Ulathil kaayam irupinum veliyae sirithu anaivaraium
Magilvikum ennai komali ena anaivarum koora....
Indru en nizhalum ennai paarthu keli seiya
Thodangivitadhu ivan komali endru...
Ennai paarthu sirka aal undu ennai magilvikka
Aal undo ingu???
Endru dhinamum thanakul uraiyadalgalai nadathum orr,
Makalai magilvikkum kalaignanin kootru....!!
Superb!!!
ReplyDeleteSuperb!!!
ReplyDeleteNice da..
ReplyDelete