Saturday, August 8, 2015

குப்பை தொட்டி (Kuppai Thotti)




குப்பை தொட்டியில் தொட்டில்  குழந்தை
கிடப்பதும் இங்குதான்...!!
தங்கத்தொட்டிலில் மழழை தவழ்வதும் இங்குதான்...!!
பசிக்காக  குப்பை தொட்டியில் கிடக்கும்  மிச்சத்தினை
உண்பவனும் இங்குதான்..!!
பசி இன்றி உணவை குப்பைத்தொட்டியில்
கொட்டுபவனும் இங்குதான்...!!
அரை ஆடை அணிந்து கலாச்சாரம்  என திரிவோர்...
குப்பைகளை கொட்டுவதும் இங்குதான்...!!
அரை ஆடை  கூட  இன்றி குப்பைகளில் ஆடையினை...
தேடும் அவலமும்  இங்குதான்....!!
தேசத்தினை தூய்மை படுத்த விளம்பரம் செய்வோரும் இங்குதான்....!!
அன்றாடம் குப்பை அள்ளும் மனிதர்களை...
வெறுப்போடு பார்போரும்  இங்குதான்...!!
குப்பையில் கிடக்கும் அவனும் மனிதன் தான்..!!
குப்பையை எறியும் நாமும் மனிதன் தான்...!!

வாழும் வாழ்கையும் ஒன்றுதான்....
ஆதரவற்று குப்பையில் கிடக்கும் அவனும் நம் உறவுதான்...!!
அவர்களுக்கு தேவை பணம் அல்ல  அன்பு ஒன்றே ஒன்றுதான்.....!!

உணர்வோம் விழித்தெழுவோம்...!!

 Kuppai thotiyil  thottil kuzhandhai
Kidapadhum inguthan...!!
Thangathottilil mazhazhai thavazhvadhum inguthan...!!
Paikaga kuppai thottiyil kidakkum michathinai
unbavanum inguthan...!!
Pasi indri unavai kuppai thottiyil
Kotubavanum inguthan...!!
Arai aadai anindhu kalacharam ena thirivor...
Kupaigalai kotuvadhum inguthan...!!
Arai aadai kuda indri adaiyinai...
thedum avalamum inguthan...!!
Desathinai thooimai padutha vilambaram seivorum inguthan...!!
Andradam kuppaiagalai allum manidhargalai...
verupodu paarporum inguthan...!!
Kupaiyil kidakkum avanum manidhan than...!!
Kupaigalai eriyum naamum manidhan than...!!

Vaazhum vaazhkai ondruthan....
Adharavtru kupaiyil kidakkum avanum nam uravuthan....!!
Avrgalukku thevai panam alla anbu ondrae ondru than....!!

Unarvom vizhithezhuvom...!!

No comments:

Post a Comment