Saturday, August 29, 2015

சத்தம் இல்லாத தனிமை தேடி (Satham iladha thanimai thedi)


சத்தம் இல்லாத தனிமை தேடி....
காதலை தேடி நானும் ஓடி....
பெண் அவள் மாற்றிய நான் ஒரு பேடி...
சென்றேன் தேடி அவளை நாடி.....
பேசக்கூட சந்தர்ப்பம் இன்றி விட்டுச்சென்றால் கள்ளி....
என் நெஞ்சை கிள்ளி....
உடலில் ஓடிய செங்குருதி,அது வெளியே சிந்தி....
சிந்திய ரத்தம் சிதற,அது யாதென்று நானும் பதற....
பதறிய போக்கு சிதறிய நெஞ்சம் மாறியது கொஞ்சம்....
நட்பின் அரவணைப்பில் எழுந்திட துடித்தேன்.....
கிடைத்தது நட்பு....
கண்டேன் பண்பு,கொண்டேன் அன்பு....
என்னை நானே ரசிகத்தொடங்கிய காலம்...
என் நட்பின் அடைமழை அன்பின் எதிர்காலம்....
காலம் செல்லும் எங்கோ துள்ளும்.....
துள்ளும் எந்தன் நெஞ்சம் சற்று எங்கோ நிற்கும்....
நின்ற பிறகு அமைதியாய் உறங்கி....
மீண்டும் எழாத வரம் வேண்டி தீக்கு இறையாவேன்....!!


Satham iladha thanimai thedi....
Kaadhalai thedi naanum odi...
Pen aval maatriya naan oru pedi....
Sendraen thedi avalai naadi....
Pesakkoda sandharpam indri vittuchendral kalli...
En nenjai killi...
Udalil odiya sengurudhi,adhu veliyae sindhi....
Sindhiya ratham sidhara,adhu yadhendru naanum padhara....
Padhariya pokku sidhariya nenjam maariyadhu konjam....
Natpin aravanaippil ezhundhida thudithaen....
Kidaithadhu natpu....
Kandaen panbu,Kondaen anbu....
Ennai naanae rasikathodangiya kaalam....
En natpin adaimazhai anbin edhirkaalam....
Kaalam sellum engo thullum....
Thullum endhan nenjam satru engo nirkum....
Nindra piragu amaidhiyai urangi....
Meendum ehzahda varam vendi theeku iraiyavaen....!!

Friday, August 28, 2015

விவசாயி (Vivasayi)



நீ சோற்றில் கை வைக்க நான் சேற்றில் கால் வைத்தேன்.....
நீ தினமும் அன்னம் உன்ன நான் நாத்து நட்டேன்.....
பயிர் விதைத்து மழை வேண்டி வானம் பார்க்கும்
வானம் பாடி பறவை நான்....!!
என் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு விற்க
நேரிடும் காலம் இது....!!
விவசாயம் தொடர முடியாமல் தற்கொலை செய்து
கொள்கிறோம்.....
இதை கவனிக்க போதிய நேரம் இல்லை மக்களுக்கு....!!
ஓர் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என பேசும்
கூட்டம் ஓர் விவசாயியின் துன்பங்களை பற்றி பேசத்தான்
செய்கிறார்கள் மேடையிலும்,விவாதத்திலும்....!!
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்யும் நாங்கள்...
இன்று எங்களின்  அன்றாட பசிக்காக வேருதொழில் செய்கிறோம்....
நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் இருக்கலாம்
ஆனால் அதன் பின் ஓர் விவசாயின் உழைப்பு உள்ளதை மறவாதீர்....!!
என விழியோரம் நீர்த்துளிகளை இறைத்தபடி தனது
மனக்குமுறல்களை எடுத்துரைக்கும் விவசாயியின் கூற்று....!!


Nee sotril kai vaikka naan etril kaal vaithaen....
Nee dhinamum annam unna naan naathu nataen....
Payir vidhaithu mazhai vendii vaanam paarkum
Vaanam paadi paravai naan....!!
En vivasaya nilangalai thozhirsalaigalukku virka
Neridum kaalam idhu...!!
Vivasayam thodara mudiyamal tharkolai seidhu
Kolgirom...!!
Idhai gavinka podhiya neram illai makkalukku....
Orr naatin mudhugelumbu vivasayam ena pesum
Kootam orr vivasayiyin thunbangalai patri pesathan seigiragal
Medaiyilum,Vivadhathilum...!!
Parambarai psrambaraiyaga vivasayam seiyum naangal....
Indru engalin andrada pasikaga veruthozhil seigirom....
Nengal sappidum ovovru arisiyilum ungal peyar irukalam
Annal ahan pin orr vivasaiyin uzhaipu uladhai maravadheer....!!
En vizhioram neerthuligalai iraithabadi thanadhu
Mnakkumuralgalqai eduthuraikkum vivasaiyiyin kootru....!!

Monday, August 24, 2015

கோபம் (Kobam)


எனது ஏக்கங்கள் தீராத பொது அதன் தாகத்தில்
வெளிவருவது கோபம்....
எதிர்பார்த்த அன்பு கிடைக்காத போது என் மனதின்
வேதனைகள் வெளிபடுத்துவது கோபம்.....
எப்போதும் கோபமா என்கிறார்கள்.....
நான் ஓர் மழழை போல் செய்வது அறியாமல்
கோபம் கொள்கிறேன்.....
எனது அன்புக்குரியோர்கள் என்னை விட்டு விலகையில்
எனது காயங்கள் கோபம் ஆகிறது....
கோபம் கொள்வதால் நான் முரடன் அல்ல....
என் கோபத்தை பார்க்கும் அனைவரும் என் கோபத்தில் இருக்கும்
உண்மையினையும் எனது உணர்சிகளையும் பார்பது இல்லை
என உணரும் பொழுது கோபத்தில் விழி நீர் இறைந்து
வழிகிறது கண்ணின் ஓரம்....!!

Enadhu yaekangal theeradha podhu adhan thakkathil
Velivaruvadhu kobam....
Edhirpartha anbu kidaikadha podhu en manadhin
Vedhanaigalai velipaduthuvadhu kobam....
Epodhum kobam enkirargal...
Naan oor mazhazhai pol seivadhu ariyamal
Kobam kolgiraen....
Enadhu anbukuriyorgal ennai vittu vilagaiyil
ENadhu kayangal kobam aagiradhu....
Kobam kolvadhal naan muradan allaa..
En kobathai paarkum anaivarum en kobathil irukkum
Unmaiyinaiyum enadhu unarchigalaiyum parpadhu illai.....
Ena unarum pozhudhu kobathil vizhi neer iraindhu
Vazhigiradhu kanin oram....!!

Sunday, August 23, 2015

பிரிவு(Pirivu)


தேடி கிடைக்கவில்லை இவளது சொந்தம்...
இனி தேடியும் கிடைக்போவதில்லை இவளை
போன்ற உறவு.....
பெண் நெஞ்சம் அறியாத குருடனாக இருந்த என்னை...
பெண்களின் உணர்வை புரியவைத்தாள்....
இவளை தோழி என்பதா இல்லை வாழ்வை கற்றுத்தர 
வந்த ஆசான் என்பதா???
இவளை விட்டு பிரிய எனக்கு கிறுக்கு பிடிக்கவில்லை....!!
இருந்தும் விலகி நிற்க காரணம் மீண்டும் காயப்பட்டு இவளை 
இழக்க கூடாது என்பதற்காக....!!
எத்துயரம் இவளால் நான் தாங்கிடினும் இவள் என் 
தோழி....
என் இன்னுயிர் பிரியும் வரை இவளை அன்பால் காப்பேன் 
காவலனாக...தோழனாக....!!
நட்பிற்கு வரிகள் படைப்பினும்.....என் 
கவலைகளை உள்ளே சுமக்கிறேன் ....நட்பின் 
அன்பினை குறையாமல் ஓர்... தாய்
போல்...காலங்கள் ஓடின... இவள் 
அன்பு இல்லாமல்...இருப்பினும் மீண்டும்....இவள் 
அன்பினை  எதிர்பார்த்து  காத்திருக்கிறேன்...நட்பின் 
பயணத்தை மீண்டும் தொடர ஓர்...சேய்
போல் தவிக்கிறேன் அது நடக்காமல்...நான்
நட்பின் பிரிவை எந்நாளும் எண்ணியபடி....!!

Ini thediyum kidaikavillai ivaladhu sondham...
Ini thediyum kidaikapovadhillai ivalai
pondra uravu...
Pen nenjam ariyadha kurudanaga irundha ennai....
Penngalin unarvai puriyavaithal....
Ivalai thozh enbadha illai vaazhvai katruthara
Vandha aasan enbadha??
Ivalai vittu piriya enaku kirukku pidikavillai...!!
Irundhum vilagi nirka karanam meendum kayapattu ivalai
Izhaka koodadhu enbatharkaga....!!
Ethuyaram ivalal naan thangidinum ival en
Thozhi...
En innuyir piriyum varai ivalai anbal kaapaen
Kavalanaga...Thozhanaga...!!
Natpirku varigal padaipinum....En
Kavalaigalai ullae sumakiraen...Natpin
Anbinai kuraiyamal orr..Thaii
Pol..Kalangal odina....Ival
Anbu ilamal...Irupinum meendum..Ival
Anbinai edhirparthu kathirukkiraen...Natpin
Payanathai meendum thodara or..Seii
Pol thavikiraen adhu nadakamal...Naan
Natpin pirivai ennalum enniyabadi...!!

Saturday, August 22, 2015

வரிகள் (Varigal)


எனது கவலைகளை உணர்த்த உதவுவது என் வரிகள்...!!
என் எண்ணங்களை விவரிக்க உதவுவது வரிகள்...!!
எனது காயங்களை வெளியே சொல்ல இயலாத போது....
வரிகளில் சித்தரிகிரேன் சித்திரமாக அதை பார்த்தாவது
பிறர் உணர....!!
உணர இங்கே உணர்சிகள் வரிகளில் தெரிய....
இதை படித்து உணர ஆள் இல்லாத போதும்....வரிகளில்
எனது எண்ணங்களை எழுதுவதால்....
மனதின் பாரம் சற்றே குறைய....
இதை படித்தும் காயம் ஏற்படுத்தியவர் உணராத போது....
வரிகளும் செயல் இழந்து காணப்பட....
என் கண்ணீர்த்துளி பெருக்கெடுக்கையில்....
எனது கண்ணீரினை துடைக்க எனது வரிகள் முயற்சிகின்றன....!!
காரணம் எனது உணர்சிகளை கொண்டு அதற்கு
உயிர் ஊட்டியதால்.....!!
என்றும் வரிகளின் துணையில் வாழ பழகுகிறேன்....!!


En kavalaigalai unartha en varigal...!!
En ennangalai vivarikka udhavuvadhu varigal...!!
Enadhu kayangalai velilyae solla iyaladha podhu....
Varigalil sitharikiraen sithiramaga adhai paarthavadhu
Pirar unara...!!
Unara ingae unarchigal varigalil theriya...
Idhai padithu unara aal iladha podhum....Varigalil
Enadhu ennangalai ezhudhuvadhal...
Mnadhin baaram satrae kuraiya....
Idhai paduthum kayam erpaduthiyavar unaradha podhu....
Varigalum seyal izhandhu kanapa.....
Enadhu kaneerthuli perukedukkaiyil....
Enadhu kaneerinai thudaikka enadhu varigal muyarchikindrana....!!
Karanam enadhu unarchigalail kondu adharku
Uyir ootiyadhal....!!
Endrum varigalil thunaiyil vaazha palagugiraen....!!

Friday, August 21, 2015

யாசகன் (Yasagan)


ஊர் எங்கும் சுற்றி திரிகிறேன் நாடோடியாக...
என் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள யாசிக்கிறேன்.....
யாசகம் கேட்பதால் என்னை வெறுக்கும் சிலர்....
வெறுப்பதால் என்னை ஒதுக்கும் பலர்....
இவர்களின் செயலினால் என் மனம் புன்னடைய.....
புண்பட்ட நெஞ்சத்தோடு வளம் வருகிறேன்.....
எனக்கு வசிக்க வீடு இல்லாவிடினும்....
இந்த நாடு என் வீடு என வாழ்கிறேன்....!!
சொலிக்கொள்ள உறவு என்று ஒன்று இல்லாவிடினும்
இங்கு அனைவரும் என் உறவு என உணர்கிறேன்....
அவ்வாறு  நான் மட்டும் உணர பலர்...என்னை
பிச்சை எடுக்கும் தொழில் செய்வதால் பிச்சைக்காரன் என....
தனியே ஒதுக்க என்ன  தவறு இழைத்தேன்???
நானும் அவர்களை போல் ஓர் உயிர்தானே???
ஏன் என்னை சகமனிதனாக ஏற்க மறுக்கின்றனர்???
என தன்னுள்ளே கேள்விகளை மட்டும் கேட்டுகொண்டு
விடை அறியாமல் சுற்றி திரியும் ஓர் யாசகனின் கூற்று....!!


Oor engum sutri thirigiraen nadodiyaga.....
En thevaigalai poorthi seidhukolla yasikiraen....
Yasagam ketpadhal ennai verukkum silar....
Verupadhal ennai odhukum palar....
Ivargalin seiyalinal en manam punnadaiya.....
Punpatta nenjathodu valam varugiraen....
Enaku vasika veedu ilavidinum...
Indha naadu en veedu ena vaazhgiraen...!!
Solikkola uravu endru ondru ilavidinum....
Ingu naivarum en uravu ena unargiraen.....
Avaru naan mattum unara palar ennai....
Pichai edukkum thozhil seivadhal pichaikaran ena....
Thaniyae odhukka ena thavar izhaithaen???
Naanum avargalai pol or uyirdhanae???
Yaen ennai sagamanidhanaga erka marukindranar???
Ena thannulae kelvigalai mattum ketukondu
Vidai ariyamal sutri thiriyum or yasaganin kootru....!!

 

Thursday, August 20, 2015

துரதிஷ்டசாலி (Dhuradhistasali)



நேசித்த உறவின் அன்பு வேறொருவரை சென்றடையும்
பொழுது என் அன்பு  அங்கே தோற்க நான்
துரதிஷ்டசாலி ஆகிறேன்...!!
என் முகம் சிரிப்பினை உண்டாக்காத பொழுது
மட்றவர் முகம் புன்னகையினை உண்டாக்க
நான் துரதிஷ்டசாலி ஆகிறேன்...!!
என்னோடு இருக்கையில் ஒருவர் தானாக இருக்காமல்
வேறோருவராய் உணரவைக்கும் எனது அன்பின்
செயலினால் நான் துரதிஷ்டசாலி ஆகிறேன்...!!
எனது கோமாளி தனத்தில் இரு உறவுகளுக்கு இடையே
ஊடல் உண்டாகும் பொழுது...நான்
துரதிஷ்டசாலி ஆகிறேன்...!!
என் உறவினை துறந்து வேர் ஒரு உறவினை பெறுகையில்
அங்கே என் நட்பின் கண்முன்னே....
துரதிஷ்டசாலி ஆகிறேன்....!!
எந்நாளும் இனபத்தினை சிறிதளவும் துன்பத்தினை
பெரிதளவும் பெறுகையில்....
என்னை விட துரதிஷ்டசாலி உலகில் உண்டோ???
என தன்னுளே கேள்விகளை கேடுக்கொளும்....
துரதிஷ்டசாலி நான்...!!
இவரிகள் எதையும் உணர்த்தாத பொழுது என்மனதின்
ஆதங்கத்தினை உணர்த்தும்....!!

Nesitha uravin anbu veroruvarai sendraidaiyum pozhudhu
En anbu nagae thorka naan
Dhuradhistasaali aagiraen....!!
En mugam siripinai unadakadha pozhudhu
Matravar mugam punagaiyinai undakka
Naan dhuradhistasaali aagiraen...!!
Enodu irukaiyil oruvar thanaga irukaamal
Veroruvarai unaravaikkum enadhu anbin
Seiyalinal naan dhuradhistasaali agiraean...!!
Enadhu komali thanathal
iru uravugalukku idaiyae
Oodal undakkum pozhudhu...Naan
Dhuradhistasaali agiraen....!!
En uravinai thurandhu veroru uravinai perugaiyil
Angae en natpin kanmunnae...
Dhuradhistasaali agiraen....!!
Ennalum inbathinai siridhalavum thunbathinai
Peridhalavum perugaiyil....
Ennai vida Dhuradhistasaali ulagil undo???
Ena thannulae kelvigalai kettukollum...
Dhuradhistasaali naan....!!
Ivarigal edhdiyum unarthadha pozhudhu en manadhin adhangathinai unarthum...!!!

Monday, August 17, 2015

மனம் (manam)



விட்டுக்கொடுக்க மனம் இல்லை...
அன்பையும்  சரி உறவையும் சரி....
கோபத்தால் காயப்படுத்த...அதே கோபத்தால் வேதனை கொள்ள....
மனம் தள்ளாடும் குற்ற உணர்ச்சியில்...!!
கலங்கும் கண்கள் கிடைத்த உறவை எண்ணி...
கலை ஆர்வத்தில் ரேகைகளும் அன்பை சித்திரமாக சித்தரிக்க....
மீண்டும் மீண்டும் அந்த உறவை எண்ணி....
அன்பிலே கலந்து உயிரிலே நுழைந்து...
கனவிலே முளைத்து நினைவிலே வழிகாட்டும்....
எதிர்காலத்தை தன் அன்பால்..என ஓர் மனம்
தனது நட்பை மனம் முழுக்க அன்பில்  பொழிய...
அதனை நான் வார்த்தையிலே பொழிய செய்கிறேன்....
அந்த மனதின் கூற்றினை...!!
ஓ மனமே உன் மனம் கூறும் கூற்றினை வெளியே சொல்வாய்...
என என் மனம் கூறுகிறது....
ஓர் நட்பின் வேண்டுகோளாக....உன் நட்பு செழிக்க...!!
வாழ்த்துகிறேன்  அந்த உறவின் மீது நீ கொண்ட அன்பு எந்நாளும்
நீங்காது நிலைக்க...!!


Vittukoduka manam illai...
Anbaiyum sari uravaiyum sari....
Kobathal kayapadutha...adhae kobathal vedhanai kolla...
Mnam thalladum kutra unarchiyil...!!
Kalangum kangal kidaitha uravai enni...
Klai arvathil regaigalum anbai  chithiramaga chitharikka....
Meendu meendum andha uravai enni....
Anbilae kalandhu uyirilae nuzhaindhu....
Kanavilae mulaithu ninaivilae vazhikattum...
Edhirkalathai than anbal...Ena orr manam
Thanadhu natpai manam muzhukka anbil pozhiya...
Adhanai naan vaarthayilae pozhiya seigiraen....
Andha manathin kootrinai...!!
Oo manamae un mnam koorum kootrinai veiliyae solvai...
Ena en manam koorugiradhu...
Orr natpin vendugolaga...Un natpu selikka...!!
Vaazhthugiraen andha uravin meedhu nee konda anbu ennalum neengadhu nilaikka....!!

மீண்டும் கை சேர்வேனோ?? இழந்ததை பெறுவேனோ??(Meendum kai serveno?? Izhandhadhai peruveno??)




எத்துயரமும் தாங்கிடுவேன் இவளுக்காக....
இவளின் கண்ணில் கண்ணீர் சிந்தினால்...என்
கண்கள் கலங்கும் தன்னால்....நட்பின்
அன்பினை உணரவைக்கும் பாசம்...தாய்(இன் )
சாயல் பாசத்தில் கலந்திருக்க....இவள்
உறவு பெற்றதில் கர்வம் கொள்ள....இவள்(இன்)
அன்பிற்கு ஏங்க வைக்கும் வல்லமை...நட்பின்
பிரிவில் உண்டு என்பதை நான் உணர...சேய்
யாதும் அறியாமல் கண்ணீர் இறைப்பதை போல்....நான்
கண்ணீரினை போல் வரிகள் இறைக்கிறேன்....!!
வரிகள் இறைக்க காரணம் பெற்ற பாசம்...
மீண்டும் கிடைக்க எண்ணி.!!
எண்ணுவதால் என்னவோ எண்ணி கொண்டே இருக்கிறேன்
நாட்களை...!!
எனது கோபத்தில் விலக்கி வைக்கிறேன்...விலக்கி வைப்பதை
உணர்பவர் எனது கோபத்தின் காரணத்தை உணர...
நேரம் இல்லை போலும்,புதியதோர் உறவு முளைத்த காரணம்....!!
மீண்டும் கை சேர மனம் துடிக்க...அதே அன்பினை மீண்டும் பெறுவேனோ??
என்ற ஏக்கத்தோடு நான்...நினைவின் பிம்பத்தில் வாழ்கிறேன்...!!

Ethuyaramum thangiduvaen ivalukkaga....
Ivalin kannil kaneer sindhinal...En
Knagal kalangum thannal...Natpin
Anbinai unaravaikkum paasam...Thaai(in)
Saayal pasathil kalandhirukka..Ival
Uravu petradhil garvam kolla...Ival(in)
Anbirku yaenga vaikkum valamai...Natpin
Pirivil undu enbadhai naan unara..Seii
Yaadhum ariyamal kaneer iraipadhai pol...Naan
Kanneerinai pol varigal iraikiraen...!!
Varigal iraikka karanam petra paasam....
Meendum kidaikka enni...!!
Ennuvadhal enavo enni kondae irukkiraen
Naatkalai....!!
Enadhu kobathil vilakki vaikiraen...Vilakki vaipadhai
Unarbavar enadhu kobathin karanathai unara...
Neram illai polum,pudhiyadhor natpu mulaitha karanam...!!
Meendum kaisera manam thudikka...adhae anbinai meendum peruveno??
endra yaekkathudan naan...Ninaivin bimbathil vaazhgiraen...!!





Sunday, August 16, 2015

பெண் (penn)



ஓர் உயிரினை ஈன்றெடுக்க அவள் மரணத்தினை
வெல்கிறாள்.....
ஓர் ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கிறாள்...
கணவனுக்கு தாய் ஆகி...அவனை செய்யாக பார்த்து
கொள்கிறாள்...!!
பிறகு அவனால் உண்டாகும் சேய்யிற்கு....
தாய் ஆகிறாள்....
தான் வேதனை கொள்கையில் காற்றில் ஆடும்  மரம் ஆகிறாள்....!!
கிளையின்  தளும்புகள் போல் அவளின் துன்பங்கள்....
தளும்பாக நெஞ்சில் நிற்க...அவற்றினை உள்ளே பூட்டி
வைக்கிறாள் யாரும் அறியா  வன்னம்...!!
அவள் வேதனைகளை அறிய நேரம் இல்லை ஆண்களுக்கு....
இருந்தும் தன் துன்பங்களை எதிர்த்து தனியே .....
உறுதி கொண்ட நெஞ்சினாய் விளங்குகிறாள் பெண்...!!

பிறக்கும் பொழுது அறியவில்லை பெண்ணின் பெருமையினை...
வளரும் பொழுது அறிகிறேன் அவளின் பெருமையினை....!!

என் வாழ்வில் கலந்திருக்கும் பெண்களாகிய...
எனது தாய்
எனது தோழி
எனது  சகோதரிகள்
பொழியும் அன்பின் மூலம்...!!

பெண்கள் நம் கண்கள் நு சொன்ன மட்டும் பத்தாது
அந்த கண்களை ஒழுங்கா பாத்துக்கணும்
மதிக்கணும்...!!

இந்த வரிகள் வாழ்வில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு சமர்ப்பணம்...!!

Or uyirinai eendredukka aval maranathinai
velgiral....!!
Or aanin vetrikku pinnal irukkiral..
Kanavanukku thaai aagi...avanai seii aga parthukolgiral...!!
Piragu avanal undagum seii irkku...
Thaai agiral...
Thaan vedhanai kolgaiyil kaatril aadum maram aagiral....!!
Kilaiyin thazhumbugal pol avalin thunbangal...
Thazhumbaga nenjil nirkka...avatrinai ullae pootivaikiral...
yaarum ariya vanama...!!
Aval vedhanaigalai ariya neram ilaai aangalukku...!!
Iurndhum than thunbangalai edhirthu thaniyae urudho konda nenjinaai...
vilangugiral penn...!!
Pirakkum pozhudhu ariyavillai pennin perumaiyinai....
Valarum pozhudhu arigiraen avalin arumaiyinai...!!

En vaazhvil kalandhirkum pengalagiyai
Enadhu THAAI
Enadhu THOZHI
Enadhu SAGODHARIGAL
pozhiyum anbin moolam...!!

Pengal nam kangal nu sonna mattum pathadhu...
andha kangalai olunga pathukanum..
Madhikanum...!!

Indha varigal vaazhvil sirandhu vilangum pengalluku samarpanam...!!


Wednesday, August 12, 2015

என் நட்பின் உயிர் மூச்சு இவள்..இவள் நட்பின் உயிர் சுவாசம் நான் (En Natpin uyir Moochu Ival...Ival Natpin Uyir Swasam Naan...!!



எப்பொழுதும் கர்வம் கொள்வேன் என் தோழி இவள் என்று....!!
திகைத்து போனேன் இவள் நட்பின் அன்பை கண்டு...
கடைசி மூச்சு உள்ள வரை என் உயிர் மூச்சு பேசும்
இவள் நட்பை பற்றி...!!
என்னை நட்பால் அரவணைத்து என் மூச்சு காற்றினையும்
இவள் நட்பின் வாசம் உணர வைத்தாள்...!!
இங்கு இவள்(ஐ ) தோழமை பாராட்ட என்ன தவம் செய்தேனோ???
வருடங்கள் கடந்தும் வாழும் எங்கள் நட்பின் பாசம்...
பாசாங்கு காட்டாமல் நட்பின் உயிர் சுவாசம் கொண்டு...
இவள் நட்பின் விஸ்வாசி ஆக்கிவிட்டாள்....!!
உயிர் உள்ளவரை  இவளின் நட்பின் அன்பை என்னாளும்...
போற்றுவேன் நான்...!!

Epozhudhum garvam kolvaen EN thozhi ival endru...!!
Thigaithu ponen ival NATPIN anbai kandu...
Kadaisi moochu ulla varai en UYIR moochu pesum
Ival natpai patri...!!
Ennai natpal aravanaithu en MOOCHU kaatrinaiyum
IVAL natpin vaasam unaravaithal...!!
Ingu IVAL(ai) thozhamai paratta enna thavam seidheno???
Varudangal kdandhum vaazhum engal NATPIN paasam...
Paasangu kaatamal natpin UYIR SWASAM kondu....
Ival natpin viswasi aakivittal...!!
Uyir ullavarai ivalin natpin anbai ennalum...
Potruvaen NAAN...!!





Tuesday, August 11, 2015

புரியாத ஆனந்தம் (Puriyadha anandham)



பிரிந்தது நட்பு என முறிந்தது இதையம்....
ஆயினும் நட்பு வளர்த்தது நம்பிக்கை....
கை கொடுக்க ஆள் இல்லா நேரத்தில்....
இவள் அன்பு கைகொடுக்க நட்பின் உண்மையான அன்பை...
உணர்ந்தேன்....!!
காலங்கள் ஓடியும் கண்கள் கண்டவுடன்...
துள்ளி எழுந்த மகிழ்ச்சி,இதனை விவரிக்க வார்த்தை இல்லை...!!
இன்று என்னை உண்மையான அன்பால் அரவணைக்க
சிலர் உண்டு...
அனால்,அன்றொரு நாள் இவள் விதைத்த விதை
இன்று எனது நட்பின் மரமாக காட்சி அளிக்கிறது ....!!
மீண்டும் நட்பின் மகிழ்ச்சியல் உரையாட சந்தர்பம் கிட்டாதோ
என ஏங்கிய மனதிற்கு...
நட்பின் வடிவிலே மீண்டும் என்னை அன்பால் அரவணைக்க
கண் எதிரே தோன்றிய என் நட்பே....
இங்கு என் கால்கள் வான்போக ஆரம்பித்து விட்டது மகிழ்ச்சியில்...!!
இக்கணம் நேர ஆண்டு காலம் காத்திருக்க நேரிட்டது....
இனியும் உன் நட்பை துலைக்க மாட்டேன்...அவ்வாறு
துலைத்தாலும்  உன் நட்போடு துலைந்து போவேன்...!!

புரியாத ஆனந்தத்தில் திளைக்கிரேன் என்னையும் மறந்து...!!
உயிர் துறந்தாலும் உன் நட்பின் அன்பை என்றும் மறவேன்...!!


Pirindhadhu natpu ena murindhadhu idhaiyam...
Aayinum natpu valarthadhu nambikai...
Kai kodukka aal ila nerathil...
Ival anbu kaikodukka natpin unmaiyana anbai unarndhaen...!!
Kalangal odiyum kangal kandavudan...
Thulli ezhundha magilchi, Idhanai vivarikka vaarthai illai...!!
Indru ennai unmaiyana anbal aravanaikka
silar undu....
Aanal,Androru n aal ival vidhaitha vidhai
Indru enadhu natpin maramaga kaatchi allikiradhu...!!
Meendum natpin mgailchiyil uraiyada sandharpam kittadho
Ena engiya manadhirku....
Natpin vadivilaee meendum ennai anbal aravanaikka
kan edhirae thondriya en natpae....
Ingu en kaalgal vanpoga arambithu vitadhu magilchiyil....!!
Ikakanam nera aandu kaalam kathiruka neritadhu....
Iniyum un natpai thulaikka mataen...Avaru
Thulaithalum un natpodu thulaindhu popvaen....!!

Puriyadha anandhathil thilaikiraen ennaiyum marandhu...!!
Uyir thurandhaalum un natpin anbai endrum maravaen....!!

Monday, August 10, 2015

துரோகம் (Dhrogam)



நம்பியவர் நெஞ்சை வஞ்சகத்தால் கிழித்தெறிவது
துரோகம்..!!
பாசாங்கு காட்டி பின் தூக்கி எரிய பழி கூறுவது
துரோகம்..!!
புதிய உறவு முளைக்கையில் பழகிய உறவை
மறக்கையில் அங்கே முளைப்பது துரோகம்...!!
உறவினை துச்சமாக என்னுவது துரோகம்...!!
தனது அன்பை உண்மையென எடுத்துரைத்து அதை
வேர் ஒருவருக்கு அளிப்பது துரோகம்...!!

அன்று துரோகத்தால் அரசன் ஆண்டி அனான்....
ஆன்டி அரசவை ஏறினான்...!!
இன்று துரோகத்தால் அப்பாவி தூக்கு மேடை ஏற
குற்றவாளி சுதந்திரம் காண்கிறான்...!!

துரோகம் இழைக்கும் வஞ்சகர்கலே...
உண்மையாக இருத்தல் உங்கள் உடலில் ஓடும் செங்குருதியும்
விரும்பாது போலும்...
ஆகையால் தான்  துரோகம் இழைக்கிரீர்களோ???
துரோகத்தின் தாகத்தினை தினமும் நான் எதிர்நோக்க...
துரோகத்தின் தாகம் தீராதமையல் அவர்கள்,
தினமும் துரோகம் இழைக்க...
இந்த அற்ப செய்களை கண்டு இவர்களின் அறியாமையினை
கண்டு என் நெஞ்சம் சட்ரே  புன்னகைக்க தான்  செய்கிறது...!!

இவ்வரிகளை படித்து உணர்து திருந்த அவர்கள்
மனிதர்கள் அல்ல...
இவர்களை திருத்த நான் மகானும் அல்ல...
இவர்களை போல் வஞ்சகம் செய்ய நான் துரோகியும் அல்ல...!!
எனது மனகூற்றினை வரிகளில் விவரிக்கும்
பகுத்தறிவாளன்....!!

என் வரிகள் துரோகம் இழைத்த அணைத்து வஞ்சம் நிரம்பிய
மாசுபடிந்த உள்ளங்களுக்கு சமர்ப்பணம்....!!!
அவர்களுக்கு உள்ளம் என்று ஒன்று இருந்தால்...!!




Nambiyar nenjai vanjakathal kizhitherivadhu
dhrogam...!!
Paasangu kaati pin thookki eriya pazhi kooruvadhu
Dhrogam...!!
Pudhiya uravu mulaikaiyil pazhagiya uravai
marakaiyil angae mulapadhu dhrogam...!!
Uravinai thuchamaga ennuvadhu dhrogam...!!
Thanadhu anbai unmai ena eduthuraithu adhai
ver oruvaruku alipadhu dhrogam...!!

Andru dhrogathil arasan aandi anan...
Aandi arsavai erinan...!!
Indru dhrogathal appavi thooku medai era....
Kutravali sudhandhiram kaangiran...!!

Dhrogam izhaikum vanjargalae unmaiyaga irundhal...
ungal udall odum senguridhu virumbadhu polum...
Aagaiyal than enavo dhrogam izhaikireergalo???
Dhrogathin thakathinai naan dhinanmum edhir nokka...
Dhrogathin thaagam theeradhamayal avargal dhinamum
Dhrogam izhaikka...
Indha arpa seyalgalai kandu... Ivargalin ariyamaiyinai kandu
en nenjam satare punagaika than seigiradhu...!!

Ivvarigalai padithu unarndhu thirundha avargal
manidhargal alla....
Ivargalai thiruthha naan Mahanum alla...
Ivargalai pola vanjagam seiya naan dhrogiyum alla..!!
En manakootrinai varigalil vivarikkum...
Pagutharivalan...!!

En varigal dhrogam izhaitha anaithu vanjam nirambiya
maasu padindha ullangalukku samarpanam....
Ullam endru ondru irundhal...!!


Sunday, August 9, 2015

ஏக்கம் (Yaekkam)



தாயின் முகம் காணாமல் குழந்தை அழுவது
மழழை ஏக்கம்....!!
காதலி அன்பு இல்லாமல் காதலன் தவிப்பது
காதல் ஏக்கம்...!!
பாசாங்கு காட்டுபவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பது
அன்பின் ஏக்கம்...!!
மழை வேண்டி வானம் பார்க்கும் விவசாயி
கொள்வது அவனது பசி ஏக்கம்...!!
தோல்வி தழுவிய வீரன் வெற்றியினை எதிர்நோக்கி
காப்பது வெற்றி ஏக்கம்...!!
ஏக்கங்கள் பல அனால் அதன் தாக்கங்கள்
ஒன்றே...!!
ஏக்கங்கள் தீரும் ஆயின் அதன்
தாக்கங்கள் குறையும்...!!

அவ்வகையான ஏக்கத்தின் தாகத்தில் தீட்டும் வரிகள் இவை...!!



Thaayin mugam kanamal kuzhandhai azhuvadhu
Mazhazhai yaekkam...!!
Kadhali anbu ilamal kaadhalan thavipadhu
Kaadhal yaekkam...!!
Paasangu katubavargalidam anbai edhirparpadhu
Anbin yaekkam...!!
Mazhai vendi vaanam paarkum vivasaiyi
Kolvadhu avanadhu pasi yaekkam...!!
Tholvi thazhuviya veeran vetriyinai edhirnokki
kapadhu vetri yaekkam...!!
Yaekangal pala aanal adhan thaakangal
Ondrae...!!
Yaekangal theerum aayin adhan
Thaakangal kuraiyum...!!

Avagaiyana yaekathin thakathil theetum varigal ivai...!!

Saturday, August 8, 2015

குப்பை தொட்டி (Kuppai Thotti)




குப்பை தொட்டியில் தொட்டில்  குழந்தை
கிடப்பதும் இங்குதான்...!!
தங்கத்தொட்டிலில் மழழை தவழ்வதும் இங்குதான்...!!
பசிக்காக  குப்பை தொட்டியில் கிடக்கும்  மிச்சத்தினை
உண்பவனும் இங்குதான்..!!
பசி இன்றி உணவை குப்பைத்தொட்டியில்
கொட்டுபவனும் இங்குதான்...!!
அரை ஆடை அணிந்து கலாச்சாரம்  என திரிவோர்...
குப்பைகளை கொட்டுவதும் இங்குதான்...!!
அரை ஆடை  கூட  இன்றி குப்பைகளில் ஆடையினை...
தேடும் அவலமும்  இங்குதான்....!!
தேசத்தினை தூய்மை படுத்த விளம்பரம் செய்வோரும் இங்குதான்....!!
அன்றாடம் குப்பை அள்ளும் மனிதர்களை...
வெறுப்போடு பார்போரும்  இங்குதான்...!!
குப்பையில் கிடக்கும் அவனும் மனிதன் தான்..!!
குப்பையை எறியும் நாமும் மனிதன் தான்...!!

வாழும் வாழ்கையும் ஒன்றுதான்....
ஆதரவற்று குப்பையில் கிடக்கும் அவனும் நம் உறவுதான்...!!
அவர்களுக்கு தேவை பணம் அல்ல  அன்பு ஒன்றே ஒன்றுதான்.....!!

உணர்வோம் விழித்தெழுவோம்...!!

 Kuppai thotiyil  thottil kuzhandhai
Kidapadhum inguthan...!!
Thangathottilil mazhazhai thavazhvadhum inguthan...!!
Paikaga kuppai thottiyil kidakkum michathinai
unbavanum inguthan...!!
Pasi indri unavai kuppai thottiyil
Kotubavanum inguthan...!!
Arai aadai anindhu kalacharam ena thirivor...
Kupaigalai kotuvadhum inguthan...!!
Arai aadai kuda indri adaiyinai...
thedum avalamum inguthan...!!
Desathinai thooimai padutha vilambaram seivorum inguthan...!!
Andradam kuppaiagalai allum manidhargalai...
verupodu paarporum inguthan...!!
Kupaiyil kidakkum avanum manidhan than...!!
Kupaigalai eriyum naamum manidhan than...!!

Vaazhum vaazhkai ondruthan....
Adharavtru kupaiyil kidakkum avanum nam uravuthan....!!
Avrgalukku thevai panam alla anbu ondrae ondru than....!!

Unarvom vizhithezhuvom...!!

Friday, August 7, 2015

உறக்கம் (urakkam)


இரவெல்லாம்  கவிதை தீட்டினாலும்...
உறங்கும் பொழுது சொற்பனம் கண்டாலும்....
என் மன ஓட்டத்தினை கட்டுப்படுத்த எண்ணுகையில்....
உறக்கம் கலைந்து...
இரவை மறந்து....
பித்து  பிடித்த மூடனை போல் சுற்றித்திரிகிரேன்...!!
செவிகளுக்கு இசை ஊட்டியபடி...
சலித்த இசையும்....
மெய்சிலிர்த்த துன்பமும் என்னை மீண்டும் உறக்கத்திற்கு அழைத்து செல்கின்றன எனது சுய நினைவையும் மீறி...!!



Iravellam kavidhai theetinalum....
Urangum bozhudhu sorpanam kandalum.....
En mana otathinai katupadutha ennugaiyil.....
Urakkam kalaindhu....
Iravai marandhu....
Pithu piditha moodanai pol sutrithirigiraen....!!
Sevigalukku isai ootiyabadi....
Salitha isaiyum...
Melisilirtha thunbamum ennai meendum urakathirku alaithu
Selgindrana enadhu suyaninaivayum meeri...!!

வாழும் காலம் கொஞ்சம்(Vaazhum Kaalam Konjam)


வாழ போவது கொஞ்ச காலம்...
இந்த உயிர் படும் காயம் எளிதில் ஆறும்???
கல்லால் அடித்த காயம் ஆறும்...
சொல்லால் அடித்த காயம் தங்கிவிடும் மனதளவில்...!!
அன்பு பாராட்ட ஆள் உண்டோ இவ்வுலகில்???
எனது அன்பை உணர ஆள் இல்லை இந்த மூவுலகில்....!!
விலகி செல்ல மனம் கூறும் கருத்து ஒன்றை..
ஏற்க மறுக்கும் என் ஆழ்மணம்....!
தட்டி கழிக்கிறது என் மனதின் முறையீட்டினை கண்ணீர் வழியே...!!
என் காயம் ஆறதோ நாளடைவில்...?!
என் மனம் போகாதோ அமைதி வழியில்...
என் விழி புன்னகைக்காதோ கண்ணீர் இன்றி....???
இவன் மூச்சு பிரியதோ இக்கணமே...!!


Vaazha povadhu konja kaalam.....
Indha uyir padum kaayam elidhil aarum???
Kalal aditha kaayam aarum...
Solal aditha kaayam thangividum manadhalavil...!!
Anbu paratta aal undo ivvulagil....???
Enadhu anbai unara aal illai indha moovulagil....!!
Vilagi sella manam koorum karuthu ondrai....
Erka marukkum en aazh  manam....!
Thati kazhikiradhu en manadhin muraiyeetinai kaneer vazhiyae...!!
En kaayam aaradho naaladaivil...?!
En manam pogadho amaidhi vazhiyil....
En vizhi punagaikadho kaneer indri....??
Ivan moochu piriyadho ikkanamae....!!

வாழ்கை வாழ்வதற்கே(Vaazhkai vaazhvadharkae)



விழி இழந்த குருடன்....
மதி இழந்த மூடன்....
செவி இழந்த செவிடன்....
இவர்களே உலகில் அதிர்ஷ்டசாலிகள்...!!
விழி இன்றி அவன் காணும் உலகம் அழகு...!!
மதி இன்றி அவன் வாழும் அவன் உலகம் சிறப்பு..!!
செவி இன்றி அவன் உணரும் உலகம் தனி சிறப்பு...!!
விழி,செவி,மதி  சிறப்பாக கொண்ட அனைவரும் வாழ வழி தேடி
விழி நீரை இறைக்கிறோம்...!!
கேட்க செவி உள்ளதால்  கேட்க கூடாதவற்றை கேட்கிறோம்....
மதி உள்ளதால் யோசித்து வாழ்க்கையினை யாசிக்கிறோம் ..!!

யாசித்து  பெற இது பொருள் அல்ல....வாழ்கை..!!
அது வாழ்வதற்கே....!!


Vizhi izhandha kurudan....
Madhi izhandha moodan....
Sevi izhandha sevidan....
Ivargalae ulagil adhirstasaligal....!!
Vizhi indri avan kaanum ulagam azhagu...!!
Madhi indri avan vaazhum avan ulagam sirapu...!!
Sevi indri avan unarum ulagam thani sirapu..!!
Vizhi,Sevi,Madhi sirapaga konda anaivarum vaazha vazhi thedi
Vizhi neerai iraikkirom...!!
Ketka sevi uladhal ketka koodadhavatrai ketkirom.....
Madhi uladhal yosithu vaazhkkaiyinai yaasikirom....!!

Yaasithu pera idhu porul alla...Vaaazhakai...!!
Adhu vaazhvadharkae....!!


Thursday, August 6, 2015

மாயை (Maayai)





காலம் யாவும் கரைந்தோட மாய வலையில் சிக்கித்தவிக்கிறோம்...!!
இங்கு உறவுகள் அனைத்தும் மாயை ஆயின் அது தரும்
இன்ப துன்பங்களும் மாயையோ???
கொண்டு செல்ல நினைவுகள் அன்றி வேறு இல்லாத காரனத்தால் என்னவோ..நினைவுகள் அனைத்தும் மாயையாக தோன்றுகின்றன...!!
ஆசைகள் யாவும் மாயை....
ஆசைகள் தரும் கனவுகள் யாவும் மாயை....!
இது விந்தையான உலகம்  இங்கு...
மாயை அன்றி வேறில்லை....
பிறகு இன்று வாழும் நேரம் மட்டும் நிஜமாய் தோன்ற விழிக்க
முயற்சி செய்கிறேன் மாய  கனவில் இருந்து...!!
விழித்து எழுந்தும் மாயை பிடியில் சிக்கியபடி வரிகள் தீட்டுகிறேன்
மாயையாக...!!


Kaalam yaavum karaindhoda maaya valaiyil sikithavikirom....!!
Ingu uravugal anaithum maayai aayin adhu tharum
Inba thunbangalum maayaiyo???
Kondu sella ninaivugal andri veru iladha kaaranathal
Enavo...ninaivugal anaithum maayaiyaga thondrugindrana....!!
Aasaigal tharum kanavugal yaavum maayai...!
Idhu vindhaiyana ulagam ingu....
Mayyai andri verillai...
Piragu indru vaazhum neram mattum nijamai thondra vizhika
Muyarchi seigiraen maaya kanavil irundhu.....!!
Vizhithu ezhundhum maayai pidiyil sikiyabadi varigal theetugiraen
Maayaiyaga...!!

Monday, August 3, 2015

கோமாளி (komali)




பிறர்  சிரிக்க நான் அழுதேன்...
அவர்களோடு நான்  சிரித்தால் என்னை வெறுப்பர் ....
வேஷம் போடும் கயவர்களையும் சிரிக்க வைக்க
நான் கோமாளி வேஷம் போடுகிறேன்...!!
கள்ளம் கபடம் இல்லாத ஆள் நான்...
அதனால் தான் என்னவோ  இன்று அனைவரின்  முன்னே
கேலிச்சித்திரமாக போற்ற படுகிறேன்...!!
நான்  அழ  பிறர் சிரிக்க  எனது அழுகையினை நிறுத்த முன்வந்தவர் யார்???
உள்ளத்தில் காயம் இருப்பினும்  வெளியே சிரித்து  அனைவரையும்
மகிழ்விக்கும்  என்னை கோமாளி என அனைவரும் கூற....
இன்று என் நிழலும்  என்னை பார்த்து கேலி செய்ய
தொடங்கிவிட்டது  இவன்  கோமாளி என்று...
என்னை பார்த்து சிரிக்க ஆள் உண்டு என்னை  மகிழ்விக்க
ஆள் உண்டோ இங்கு???
என்று  தினமும் தனக்குள் உரையாடல்களை நடத்தும் ஓர்,
மக்களை  மகிழ்விக்கும் கலைஞனின் கூற்று....!!

Pirar sirika naan azhudhaen...
Avrgalodu naan sirithal ennai verupar....
Vesham podum kayavargalaium sirika vaika
Naan komali vesham podugiraen...!!
Kallam kabadam iladha aal naan...
Adhanal than enavo indru anaivarin munnae
Kelichithiramaga potra padugiraen...!!
Naan azha pirar sirika enadhu azhugaiyinai nirutha munvandhavar yaar???
Ulathil kaayam irupinum veliyae sirithu anaivaraium
Magilvikum ennai komali ena anaivarum koora....
Indru en nizhalum ennai paarthu keli seiya
Thodangivitadhu ivan komali endru...
Ennai paarthu sirka aal undu ennai magilvikka
Aal undo ingu???
Endru dhinamum thanakul uraiyadalgalai nadathum orr,
Makalai magilvikkum kalaignanin kootru....!!

Saturday, August 1, 2015

அழகிய சொந்தம் நட்பு (azhagiya sondham natpu)




வானத்தை  போல நட்பிற்கு எல்லை இல்லை என்பார்கள்....
அது உண்மையே...!!
ஏனென்னில் நல்ல நண்பர்கள் அமையும் பொழுது...
அங்கு அன்பிற்கும் நட்பிற்கும் எல்லைகள் இருபதில்லலை...!!
எவ் வழியில் நான் இழிவு படுத்தினாலும்...
என் விழியன் வழியில் கோபம் கொண்டு வெறுத்தாலும்,
என்னை தேடி  வரும்  எனது நண்பர்களின் அன்பிற்கு கைமாறு
செய்ய இயலாது தவிக்கிறேன்...!!
என்னை எனக்கு அறிமுகம் செய்தது இவர்களின் நட்பு ,இங்கே
பாசத்தின் அளவு குறைந்ததில்லை ஆயிரம் ஊடல்கள் கொண்டபோதிலும்..!!
என்னை நானே ரசிக்க தொடங்கிய காலம் என் நட்பின்
அடைமழைக்காலம்...!!
வாழும் காலம் யாவுமே நண்பர்கள் அருகில் உள்ளவரை சொர்கமே....
இறைவன் அளித்த வரமாக அமைந்த என் நண்பர்கள் ...
கவலையில் தோழ் சாய ஆறுதல் கூற என் தோழி  வைஷ்ணவி...
தோழ் கொடுக்க என் தோழன் கார்த்திக்...
நட்பின் வழியில் கிடைத்த தமக்கை ரெஸ்லீ...
உரியநேரத்தில் என் நட்பை உணர்த்தும் கலைஅரசன்,நவீன்
தங்கைகள் க்ஹ்யாதீ,க்ரேஸ்,ருச்சி ...!!
இவர்கள் இல்லாவிடில் என் நட்பின் எதிர்காலம் நிலைகுலையும்....
உயிர் துறந்தாலும் இவர்களின் நட்பின் அன்பை என்றும் மறவேன்...!!
இவர்கள் நட்பை பெற்றதில் கர்வம் கொள்கிறேன்...!!

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....!!




Vanathai pola natpirku ellai illai enbargal...
Adhu unmaiyaee...!!
Yaen ennil nalla nanbargala amaiyum pozhudhu...
angu anbirkum natpirkum ellaigal irupadhillai...!!
Ev vazhiyil naan izhivu paduthinaalum...
en vizhiyin vazhiyil kobam kondu veruthalum...
Ennai thedi varum enadhu nanbargalin anbirku kaimaru
seiya iyaladhu thavikiraen...!!
Ennai enaku arumugam seidhadhu ivargalin natpu, Ingae
paasathin alavu kuraindhadhillai aayiram oodalgal kondapodhilum...!!
Ennai naanae rasika thodangiya kaalam en natpin
adaimazhaikkalam..!!
Vaazhum kaalam yaavumae nanbargal arugil ullavarai sorgamae....
Iraivan alitha varamaga amaindha en nanabrgal....
Kavalaiyil thozh saaya aarudhal koora en thozhi Vaishnavi...
Thozh kuduka en thozhan Kaarthik...
Ntpin vaazhiyil kidaitha thamakkai Reslee....
Uriya nerathil en natpai unarthum Kalai arasan,,Naveen...
Thangaigal Khyati,Grace,Ruchi..!!
Ivrgal ilavidil en n atpin edhirkalam nilaikulaiyum...
Uyir thurandhaalum ivargalin natpin anbai endrum maravaen...!!
Ivargal natpai petradhil garvam kolgiraen...!!

Iniya nanbargal dhina nalvaazhthukal...!!


பாசாங்கு (pasaangu)

பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்துவிடு...
பொய்யாக நேசிக்காதே.... காரணம்
உண்மையான அன்பிற்கும் போலியான அன்பிற்கும்
வித்தியாசம் தெரியாமல் போய்விடும்..!!
பாசாங்கு இல்லாத பாசம் தேடும் நான்...
என் தேடுதலை நிறுத்திக்கொண்டேன்...
நிறுத்துவதன் காரணம் யாதெனில்.....
பாசாங்கு இல்லாத பாசம் பெற்றமையால் அல்ல....
பெற்ற பாசம் வேஷமாக மாறக்கூடாது என்பதற்காக.....!!
அவர்களை போல வேஷம் போட நான் நடிகனும் அல்ல....
பிறர் போடும் வேஷங்களை பார்த்து போற்ற நான் இயக்குனரும் அல்ல....
பல வேஷங்களை என் வாழ்க்கையில் கண்டதால் என்னவோ???
இன்று ஏதும் பேசாமல் புன்னகைத்து கொண்டு வலம் வருகிறேன்...
வேஷம் போடும் கயவர்கள் முன்னே ....!!!
கயவர்களே விழித்திருங்கள் என்மீது உண்மை அன்பு செலுத்தும்
அன்புடையோர்கள் உள்ளவரை உங்கள் வேஷம் நிலைக்கப்போவதில்லை...!!






Pidikavillai endral unmaiyaga veruthuvidu....
Poiyaga nesikadhae....Karanam
Unmaiyana anbirkum poliyana anbirkum
Vithiyasam theriyamal poividum...!!
Paasangu iladha paasam thedum naan...
En theduthalai niruthikkondaen.....
Niruthuvadhan kaaranam yaadhenil...
Paasangu iladha paasam petramaiyal alla...
petra paasam veshamaga maarakudadhu enbatharkaga....!!
Avrgalai pola vesham poda naan nadiganum alla...
Pirar podum veshangalai paarthu potra naan iyakunarum alla....
Pala veshangalai en vaazhkaiyil kandadhal enavo??
Indru edhum pesamal punagaithu kondu valam varugiraen....
Vesham podum kayavargal munnae...!!
Kayavargalae vizhithirungal en meedhu unmaiyana anbu seluthum
Anbudaiyorgal ullavarai ungal vesham nilaikapovadhillai....!!