Wednesday, November 4, 2015

அறம்+செயல்(Aram+Seyal)




கவலைகள் தீர்க்க தேர்ந்தெடுத்த தலைமை......
கவலைகளை  தீர்காதது தவிர்க்க முடியாத உண்மை.....!!
நாடாளும் செயலுக்கு பெயர் அரசாட்சி.....
நாட்டினை முன்னேற்ற தூண்டுமா அவர்களின் மனசாட்சி....???
சலுகைகள் கூடுவது தொழிற்சாலைகளுக்கு.....
வலிகள் கூடுவது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு.....!!
தேர்தல் களத்தில் வாக்களிப்பது எங்களின்  வழக்கம் ஆச்சு.....
பின்பு ஏமாற்றங்களை சந்திப்பது எங்களுக்கு பழகி போச்சு.....!!
ஆறம் செய்ய தேர்ந்தெடுத்தோம் ஒன்று சேர்ந்து.....
இன்று ஏமாற்றத்தில் சிறம் சாயா போகிறோம் நொந்து.....!!
வெள்ளித்திரையில் மட்டும் காண்கிறோம் அறம் செயல்....
நிஜத்தில் நாங்கள் அனுபவிப்பது  அரசியல்....!!
ஓட்டுரிமை தெளிய வைக்க சீரும் பேச்சுகள்....
ஒட்டு எண்ணியவுடன் வெளிச்சமாகும் அவை காகிதங்களில் 
பேனா மையில் தீட்டிய தந்திரங்கள்....!!
அறம் செயல்  காண  வாழ்கிறோம்....
நாடு முன்னேற ஆசை கொள்கிறோம்.....
ஆண்டுகள் கடந்தும் மாற்றம் ஏற்பட காத்திருக்கிறோம்....
என தன்னுள்ளே எழப்படும் கேள்வி பதில்களை சுமந்தபடி...
வாழும் ஜனநாயக நாட்டு மக்களின் கூற்று....!!


Kavalaigal theerka therndhetutha thalaimai....
Kavalaigalai theerkadhadhu thvirka mudiyadha unmai....!!
Naadlum seyalukku peyar arasatchi....
Naatinai munetra thoonduma avargalin manasatchi...???
Salugaigal kooduvadhu tholirchalaigalukku....
Valigal kooduvadhu makalin andrada vaazhkaikku....!!
Therdhal kalathil vakalipadhu engalin vazhakam aachu....
Pinbu ematrangalai sandhipadhu engalukku pazhagi pochu....!!
Aram seiyaa therntheduthom ondru serndhu....
Indru ematrathil siram saaya pogirom nondhu....!!
Vellithhiraiyil mattum kangirom  Aram seyal.....
Nijathil naangal anubavipadhu Arasiyal....!!
Ooturimai theliya vaikka seerum pechuugal.....
Ootu enniyavudan velichamagum avai kaagidhangalil
Pena maiyil theetiya thandhirangal....!!
Aram seyal  kaana vaazhgirom....
Naadu munnera aasai kolgirom....
Aandugal kadandhum maatram erpada kathirukirom....
Ena thannulae ezhappadum kelvi padhigalai sumandhabadi....
Vaazhum jananayaga naatu makalin kootru...!!








6 comments: