Thursday, October 29, 2015

மழை (Mazhai)




கார்மேகங்கள் கூடி....
மின்னல்கள் கூத்தாடி....
மனதினை லேசாய்  களவாடி....
தென்றல் காற்று சுகமாய் கடந்து செல்ல....
எனது நிலை என்னவென்று நான் விவரிக்கும் முன்...!!
மேகங்களின் உரசல்களில் இருந்து தப்பிபிழைத்தார் போல் ....
ஆனந்தத்துடன் கீழே கவிதை போலே அழகாய்....
பொழிந்தது மழை....!!
அம்மழை நீரில் நனைந்த படி....
நடை பயன்று வரும் ஆனந்தத்திற்கு ஈடுஇணை
உண்டோ...?? இவ்வுலகிலே....??
அவ்வாறு உண்டாயின்....!
அது மீண்டும் மழை பொழியும் தருணமே ஆகும்...!!!



Kaarmegangal koodi....
Minanlgal koothadi....
Mnadhinai lesaai kalavaadi...
Thendral kaatru sugamai kadandhu sella....
Enadhu nilai enavendru naan vivarikkum mun...!!
Megangalin urasalgalil irundhu thappi pizhaithaar pol....
Aanadhathudan kizhae kavidhai polae azhagai...
pozhindhadhu MAZHAI....!!
AmMAZHAI neeril nanaindha badi....
Nadai payandru varum aananadhathirku eeduinnai
Unndoo...?? Ivvulagilae..??
Avvaru undaiyin...!
Adhu meendum MAZHAI pozhiyum tharunamae aagum...!!



Wednesday, October 28, 2015

நீர் (NEER)






தனக்குள்ளே எரியும் தனிமை தீயினை அணைக்கிறது...
அன்பெனும் நீர்...!!
அன்பெனும் நீர் உள்ளே கரையினை கடக்க அதோடு வலியும் 
தோன்றிட அங்கே பெருக்கெடுப்பது கண்(நீர்) ...!!
கண்ணீர் இங்கே வழிந்தோட இந்த வாழ்க்கையினை  
முடித்துக்கொள்ள சிலர் தேர்ந்து எடுப்பது கடல் நீர்...!!
தாகம் தணிக்க  மக்களை அல்லோல 
படவைப்பது  குடி(நீர்)...!!
விவசாயிகளின் பாசனத்திற்கு உதவுவது
ஆற்று நீர்...!!
அதே விவசாயிகளை வானம் பார்க்கும் வானம் பாடி 
பறவை ஆக்குவது மழை நீர்...!!
பிறந்து பலரினை ஆனந்த கண்(நீர் )இல்  ஆழ்த்துகிறோம்....!!
இறந்து சோகத்தினால் கண்ணீரில் தத்தளிக்க செய்கிறோம்....!!
நீருக்கும் நமக்கும் ஓர் அழகிய பந்தம்....
இருக்கத்தான் செய்கிறது நம் நினைவும் இன்றி....!!



Thanakullae eriyum thanimai theeyinai anaikiradhu....
Anbenum NEER...!!
Anbenum NEER ullae karaiyinai kadakka adhodu valiyum
Thondrida angae perukeduppadhu kanNEER...!!
KanNEER ingae vazhindhoda indha vaazhkaiyinai
Mudithukolla silar theirndhu edupadhu kadal NEER...!!
Thagam thnaikka makalai allola
Padavaipadhu kudiNEER...!!
Vivasayigalin pasanathirku udhavuvadhu
Aatru NEER....!!
Adhae vivasaiygalai vaanam paarkum vaanam paadi
Paravai aakuvadhu Mazhai NEER...!!
Piranadhu palairnai aanadha kanNEERil aazhthugirom...!!
Iranadhu sogathinal kanNEERil thathalika seigirom...!!
NEERukkum namakkum orr azhgiya bandham....
Irukathan seigiraadhu nam ninaivum indri...!!

Tuesday, October 27, 2015

தீ (Thee)









ஒவ்வொருவர் மனதிலும் தீயானது சுடர்விட்டு 
எரிந்து கொண்டிருக்கும்....!!
துன்பங்களினால் வேதனை தீ....!
இலட்சியத்தை அடைய உத்வேக தீ....!
மனதை ஆள வந்தவளை எண்ணுகையில் ஒளிர்வது....
காதல் தீ....!
கண் எதிரே நடக்கும் அநியாயங்களை பார்க்கும் பொழுது....
சுடர்வது தீ அல்ல தீச்சுவாலை....!!
மனம் விரும்பிகளை பார்கையில் சுடர்வது...
அன்பு தீ...!
தீ அழிக்க தோன்றுவதல்ல....
உள்ளே அணைந்து கிடக்கும் தீ பொறியினை பற்ற செய்து....
தன்னம்பிக்கை,தைரியம் போன்றவற்றை கொடுக்க  வல்லது....!!
எனக்குள்ளே  சுட்டெரிக்கும் தமிழ் தீ...
என்றும் அணையாது என் மன கூற்றுகளை...
வரிகளில் எடுத்துரைக்க செய்கிறது....!!

உள்ளே எரியும் தீ அனைய நேர்ந்தால்....
அங்கே அணைவது  தீ மட்டும் அல்ல.....
உனது ஆள் மனது என்பதை மறவாதே என என்னக்குள் சுடர்விட்டு
எரிந்து கொண்டிருக்கும் தீ(இன் ) கூற்று....!!


Ovvoruvar manadhilum THEEyanadhu sudarvittu
Erindhu kondirkkum...!!
Thunbangalinal Vedhanai THEE....!
Latchiyathai adaiya udhvega THEE...!
Manadhai aala vandhvalai ennugaiyil olirvadhu
Kaadhal THEE...!
Kanedhirae nadakkum aniyayangalai paarkum pozhudhu...
Sudarvadhu THEE allaa THEEchuvalai...!!
Manam virumbigalai parkaiyil sudarvadhu...
Anbu THEE...!
THEE azhika thondruvadhalla...
Ullae anaindhu kidakkum THEE poriyinai patra seidhu....
Thannambikai,Dhairiyam pondravatrai kodukka valadhu...!!
Enakkulae sutterikkum TAMIZH THEE....
Endrum anaiyadhu en mana kootrugalai....
Varigalil eduthuraikka seigiradhu...!!

Ullae eriyum THEE anaiya nerndhal....
ANgae anaivadhu THEE mattum allaa...
Unadhu aazh manadhu enbadhai maravadhae enaa enakkul sudarvittu
erindhu kondirukkum THEE(in) kootru...!!




விழியுடன் ஓர் பயணம் (Vizhiyudan Oor Payanam)







அதிகாலை விடியலுடன் கரூரில் தொடங்க....
எந்த எதிர்பார்ப்பும் இன்றி பயணத்தை தொடங்கினேன்.....
எனது மனம் கேட்கும் எண்ணற்ற  கேள்விகளுக்கு....
விடையினை நான் அறிந்து கொண்டேன்.....
விழி விழிப்புணர்வு இயக்கம் எனது எதிர்கால இலட்சியத்திற்கு....
அடிக்கல் நாட்டியது...!!
கல்லூரிகளில் அறிவுத்திறன் போட்டிகளை நடத்த....
விழியுடன் ஓர் அங்கமாக சென்ற நான்....
எனது அறிவுத்திறனையும் சோதித்து பார்த்தேன்....!!
சோதனை முடிவு மற்றும் ரகசியம்...!!
ஏழு நாட்கள் விழியுடன்  பயணித்தேன்....
பயணம் சுவாரசியமாக அமைந்ததன் காரணம்....
பாதுகாப்பு படைகள் பற்றிய அறிவுரைகள் மற்றும்....
ஒத்துழைப்பு நல்கிய கல்லூரிகளும் மாணவர்களும்....!!
பயணம் முடித்து திரும்பிய நான்....
இன்று என் விழி திறந்து பகுத்தறிவுடன் எனது....
இன்ப துன்பங்களை எதிர்நோக்குகிறேன்....!!
அடுத்த பயணத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....!!

கரம் கொடுப்போம் அறம் செய்ய....!!!


Adhikalai vidiyaludan Karuril thodanga....
Endha ehdirparpum indri payanathai thodanginaen....
Enadhu manam ketkum ennatra kelvigalukku....
Vidaiyinai naan arindhu kondaen....
VIZHI vizhipunarvu iyakkam enadhu edhirkala latchiyathirku....
Adikal naatiyadhu....!!
Kaloorigalil arivuthiran potigalai nadatha...
VIZHIyudan or angamaga sendra naan...!!
Enadhu arivuthiranaiyum sodhithu paarthaen....!!
Sodhanai mudivu ragasiyam....!!
Yezhu naatkal VIZHIyudan payanithaen....
Payanam swarasiyamaga amaindhathan kaaranam....
Paadhugapu padaigal patriya arivuraigal mattrum...
Othuzhapu nalgiya kaloorigalum maanavargalum....!!
Payanam mudithu thirumbiya naan...
Indru en VIZHI thirandhu pagutharivudan enadhu...
Inba THunbangalai edhirnokkugiraen....!!
Adutha payanathai edhrnokki kathirukiraen....!!


Karam Kodupom Aram Seiyya...!!!


Monday, October 26, 2015

போதும் (Podhum)







பாசம் காட்ட அழகு  தேவை இல்லை...
மனம் போதும்...!!
நட்பு காட்ட பணம் தேவை இல்லை ...
நல்ல உள்ளம் போதும்....!!
கருணை காட்ட அழகிய கண்கள் தேவை இல்லை.....
உள்ளத்தூய்மை போதும்....!!
உணர்ச்சிகள் வெளிப்படுத்த சொற்கள் தேவை இல்லை....
முக பாவனைகள் போதும்....!!
வலியினை வெளிபடுத்த கண்ணீர் தேவை இல்லை....
அமைதி போதும்....!!
இன்பத்தை வெளிப்படுத்த ஆரவாரம் தேவை இல்லை....
புன்னகை போதும்....!!
காதலை வெளிப்படுத்த ஆர்பாட்டம் தேவை இல்லை....
கண்கள் போதும்....!!
பிரிவின் வலியினை கொடுக்க எதுவும் தேவை இல்லை.....
நினைவுகள் போதும்....!!
இவை போல் என் நட்பு தேவை இல்லை....
புதிய நட்பு போதும்...!! என வாழ்கிறார்கள்....!!
எனது மன கூற்றினை வெளிப்படுத்த எனது பேச்சு தேவை இல்லை....
நான் தீட்டும் வரிகளே  போதும்....!!


Paasam kaata azhaghu thevai illai....
Manam podhum...!!
Natpu kaata panam thevai illai....
Nalla ullam podhum...!!
Karunai kaata azhagiya kangal thevai illai...
Ullaththooimai podhum...!!
Unarchigal velipadutha sorkal thevai illai....
Mugabavanaigal (Facial expressions) podhum....!!
Valiyinai velipadutha kaneer thevai illai....
Amaidhi podhum....!!
Inabathai velipadutha aaravaram thevai illai.....
Punnagai podhum....!!
Kaadhalai velipadutha aarpattam thevai illai....
Kanagal podhum....!!
Pirivin valiyinai kodukka edhuvum thevai illai....
Ninaivugal podhum....!!
Ivai pol en NATPU thevai illai....
Pudhiya Natpu podhum...!! Ena vaazhgirargal...!!
Enadhu manakootrinai velipadutha enadhu pechu thevai illai....
Naan theetum varigalae podhum....!!

Sunday, October 25, 2015

கனவெல்லாம் நினைவுகள் (Kanavellam Ninaivugal)





கனவெல்லாம் நினைவுகள் தொடர.....
நினைவெல்லாம் அவற்றை நான் ஒதுக்க....
கண்ணோடு  கரையும் கண்ணீரும்.....
எனோடு மறையும் கஷ்டங்களும்....
கவலைகள்  யாதென நித்தமும்  தேடும்....
என் கண்கள் ,இமைக்காது.....
உறக்கம் கொள்ளாது  சிந்தனை யாவும் நட்பிலே கொண்டு....
அனைவரும் வியக்கும் வண்ணம்.....
வரிகள் தீட்டுகிறேன் என் அன்பினை வெளிப்படுத்த.....!!!

kanavellam  ninaivugal  thodara....
ninaivellam avatrai  naan  odhukka....
kannodu karaiyum  kaneerum.....
ennodu maraiyum kastangalum.....
kavalaigal yadhena  nithamum  thedum....
en kangal imaikadhu.....
urakkam  koladhu  sidhanai yaavum natpilae kondu....
anaivarum viyakkum  vannam.....
varigal theetugiraen en anbinai velipadutha......!!

Saturday, October 24, 2015

நீ (Nee)





நட்பு  என்ற வார்த்தைக்கு உயிர் ஊட்டியது "நீ"....
பாசம் என்ற உணர்வை உள்ளத்தில் நிறைத்தது "நீ"....
வாழ்வை கற்று கொடுக்கும் ஆசான் "நீ"....
எனக்காக கண்ணீர் சிந்தியது "நீ".....
எனது துன்பத்தில் உடன் இருந்தது "நீ"....
எனக்கு இன்பங்களை அள்ளி தந்தது "நீ"....
இன்று துன்பங்களை கிள்ளி  தருவதும் "நீ"....
உன் நட்பு இல்லாமல்  வாழ கற்றுத்தருவதும் "நீ"....
என்னை இங்கு வரிகள் தீட்ட வைப்பதும் "நீ"....
இருந்தும் உன் மீது அன்பினை பொழிய வைப்பதும் "நீ"....
என் நட்பிற்கு இலக்கனமாய்  தோன்றியது "நீ".....
"எனது நட்பின் தாய்" "நீ"....
இந்த ஓர் வார்த்தை போதும் நீ யார் எனக்கு என விவரிக்க...!!


Natpu endra vaarthaiku uyir ootiyadhu "NEE"....
Paasam endra unarvai ulathil niraithadhu "NEE"....
Vaazhvai katru kodukum aasaan(Teacher) "NEE"....
Enakaga kaneer sindhiyadhu "NEE".....
Enadhu thunbathil udan irundhadhu "NEE"....
Enaku inbangalai allithandhahdu "NEE"....
Indru thunbangalai killi tharuvadhum "NEE"....
Un natpu ilamal vaazha katrutharuvadhum "NEE"....
Ennai ingu varigal theeta vaipadhum "NEE"....
Irundhum un meedhu anbinai pozhiya vaipadhum "NEE".....
En natpirku ilakanamai thondriyadhu "NEE"....
"EN NATPIN THAAII" "NEE"....
Indha orr vaarthai podhum "NEE" yaar enaku endru vivarikka....!!


Thursday, October 22, 2015

என் துணை (En Thunai)






தனித்து  இருந்தால் கவிதை தீட்டுவேன்....
மகிழ்ச்சியில் திளைத்தால் கவிதை தீட்டுவேன்....
துன்பம் அடைந்தால் கவிதை தீட்டுவேன்.....
எந்நாளும் கவிதைகள் மட்டுமே தீட்டி கொண்டிருப்பதன் காரணம்....
என் உள்ளம் கூறும் கூற்றினை கேட்க.....
அதனோடு பயணிக்க.....
என் வார்த்தைகள் மட்டுமே என்றும் துணை நிற்கும்...
என்னை விட்டு பிரியாமல் என்ற நம்பிக்கையில்....!!



Thanithu irundhal kavidhai theetuvaen.....
Magizhchiyil thilaithal kavidhai theetuvaen.....
Thunbam adaindhal kavidhai theetuvaen......
Ennalum kavidhaigal mattumae theeti kondirupadhan kaaranam.....
En ullam koorum kootrinai ketka....
Adhanodu payanikka.....
En vaarthaigal mattumae endrum thunai nirkum....
Ennai vittu piriyamal endra nambikkaiyil.....!!

Tuesday, October 20, 2015

என் உயிருக்கும் மேல் ( En Uyirukum Mael)


உயிருக்கும்  மேலாக  நினைதேன்....
என்னை விட்டு விலக எண்ணுகையில் .....
இரவெல்லாம் அன் நினைவோடு ....
விழி நீர் இரைத்தேன்....!!
என்னை வதைக்க ஒரு சொல் போதும் வீழ்ந்து விடுவேன்.....
எதற்கும் அஞ்சா நெஞ்சம்...
இன்று அஞ்சி நிற்கிறது....
கேட்க கூடாத  சொல் கேட்டு....!!
என் மரணம் நேரும் காலம் முன்னரே...
மரணத்தின் சாயலை அச்சொலில்  உணர்ந்தேன்....!!
செய்வது யாதென்று  அறியாமல்  விழி நீர் வடிகின்றது....!!
செவி இரண்டும் செயலற்று கிடக்கிறது....!!
எனது நிலையினை பார்த்து கூத்தாடி சிரிக்கிறது
என் எண்ணங்கள்...!!



Uyirukkum melaga ninaithaen....
Ennai vittu vilaga ennugaiyil....
Iravellam ann ninaivodu....
Vizhi neer iraithaen....!!
Ennai vadhaika oru sol podhum veezhndhu viduvaen....
Edharkum anja nenjam....
Indru anji nirkiradhu.....
Ketka kodadha sol ketu....!!
En maranam nerum kaalam munarae....
Maranathin sayalai accholil unarndhaen....!!
Seivadhu yadhendru ariyamal vizhi neer vadigindradhu....!!
Sevi irandum seyalatru kidakiradhu....!!
Enadhu nilaiyinai paarthu koothadi sirikiradhu
En ennangal....!!

Edhirkatchi kaaran paatha ena enna nenaipan.... :P


அவள் (Aval)




எங்கோ ஓர் குரல்  சற்று  திரும்பி பார்த்தேன்....
அங்கே இரு கண்கள் என்னை கவர.....
பேசாது சென்றுவிட்டேன்....
மீண்டும் அதே கண்கள் என்னை கொள்ளைகொள்ள....
மனதில் இனம் புரியாத புத்துணர்ச்சி தோன்ற....
கவலைகளை  மறந்து அவள் கண்களை தேடினேன்....
என் கண்கள் கொண்டு.....
என் கண்களும் அவள் கண்களும் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ள.....
விழியசைவில் அவளது மனதில் நுழைய முற்படும் வேளையில்....
அறிந்தேன் அவள் மனது களவாடப்பட்டது  என்று .....
என் மனதை கொள்ளை அடித்தாள் ....
தன் மனது கொள்ளைபோனது என்று கூறாமல்.....
அவள்...!!
பெண்கள் விழியில் காந்தம் வைத்துள்ளனர் போலும்....!!



Engo oor kural satru thirumbi parthaen....
Angae iru kangal ennai kavara....
Pesadhu sendruvittaen.....
Meendum adhae kangal ennai kollikolla....
Mnadhil inam ouriyadha puthunarchi thondra.....
Kavalaigalai marandhu aval kangalai thedinaen.....
En kangal kondu....
En kangalum aval kangalum vaarthaigal parimaarikolla....
Vizhiyasaivil avaladhu manadhil nuzhaiya murpadum velaiyil.....
Arindhaen aval manadhu kalavadapatadhu endru....
En manadhai kollai adithal....
Than manadhu kollaiponadhu endru kooramal....
Aval.....!!
Pengal vizhiyil kaandham vaithulanar polum...!!

Monday, October 19, 2015

நான் (Naan)



சிந்தனை இன்றி கோபம் கொள்வதால் நான்
இராவணன்...!!
என் மனம் கவர்ந்த  நங்கைக்கு நான்
இராமன்....!!
எவ்வாறு  துன்பம் அடைந்தாலும் முகமலர்ச்சியுடன் ஏற்பதால் நான்
கர்ணன்....!!
என் நட்பை துன்பமாக எண்ணுபவர்  கண்களுக்கு நான்
துரியோதனன்....!!
என் நண்பர்களுக்கு உதவ முற்படும் வேளையில் நான் எமது கண்களுக்கு
கண்ணன்....!!
இவ்வாறு  புராண  கால கதாபாத்திரங்கள் போல் சிலர் கண்களுக்கு
புலப்பட்டாலும்...இக்காலத்தில் கசப்பான நினைவுகள் சுமந்தாலும்
அதை பகுத்தறிவுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கும்.....
மோகன் என்ற பகுத்தறிவாளன் "நான்"....!!



Sindhanai indri kobam kolvadhal naan
RAVANAN...!!
En manam kavarndha nangaiku naan
RAAMAN...!!
Evaru thunbam adaindhalum mugamalarchiyudan erpadhal naan
KARNAN...!!
En natpai thunbamaga enubavar kangaluku naan
DHURIYODHANAN...!!
En nanbargaluku udhava murpadum velaiyil naan emadhu kangalukku
KANNAN...!!
Ivaaru purana kaala kadha paathirangal pol silar kangalukku
Pulapattalum...Ikkalathil kasapana ninaivugal sumandhalum
Adhai Pagutharivudan edhirnokki kondirukkum....
MOHAN endra PAGUTHARIVAALAN "NAAN"....!!!

அன்பின் அங்கிகாரம் (Anbin Angigaram)





உலகில்  எல்லாவகையான அன்பிற்கும் அங்கிகாரம் தேவை.....
அங்கிகாரம் இல்லாவிடில் அன்பிற்கு மதிப்பு ஏது ????
அங்கிகாரம் பெற இது என அன்பா?? இல்லை பொருளா???  என்பர் 
நாம் செலுத்தும் அன்பிற்கு அங்கே அங்கிகாரம் கிடைக்காத பொழுது....
அன்பினை  குறைவின்றி கொடுத்து என்ன  பயன்????
வாழ்கை பாடம் கற்று தந்(தாய்).....
உன்னை விட்டு விலக  கற்று தந்(தாய்).....
இன்று வரிகளும் கோர்க்க கற்று தருகிறாய்.....
இப்படி  எல்லாம் வரிகளின் வழியில் விவரிக்கிறது
என் நெஞ்சம்.....
என் நட்பின் தாய் என்னை அனாதையாய்  விட்டு
சென்றதை எண்ணி...!!
தாய் என்னை துறந்தாலும் இந்த சேய் தாய் பாசத்தினை
மறவாது எந்நாளும்....!!
இதுதான் வாழ்கை போலும்...!!





Ulagil Ellavagaiyana Anbirkum angigaram thevai.....
Angigaram illavidil anbirku madhipu edhu???
Angigaram pera edhu enna ANBA?? illai PORULL ah?? enbar
Naam seluthum anbirku angae angigaram kidaikadha pozhudhu....
Anbinai kuraivindri koduthu enna payan???
Vaazhkai paadam katru thanTHAII.....
Unnai vilaga katru thanTHAII......
Indru varigalum korka katrutharugirai.....
Ipadi ellam Varigalin vazhiyil vivarikindradhu
En nenjam....
En natpin thaai ennai anadhaiyai vittu
sendrathai ennai....!!
Thaii ennai thurandhalum indh Seii Thaii pasathinai
marvadhu ennalum....!!
Idhuthan Vaazhkai Polum...!!!