வனத்தின் அரசனை வேட்டையாடி அரசவையில்
தோல் உரித்து தொங்கவிட்டு தன்னை சிங்கம் என்று
மார்தட்டிக்கொண்டான் ஒருவன் ....!
பதுங்கி பாயும் புலியினை சுட்டு புலித்தோலினை
விரித்து மக்களுக்கு அறிவுரை வழங்குகிறான் காவி உடை
தரித்த ஆன்மீகவாதி ஒருவன் .....!
கம்பீரமாய் நடமாடும் யானையினை பிடித்து
அதன் தந்தங்களை அறுத்து வணிகம் செய்கிறான்
வியாபாரி ஒருவன்.....!
மரக்கிளையில் தாவும் குரங்குகளை பிடித்து
வித்தை காட்டி பிழைக்கிறான் கூத்தாடி ஒருவன் .....!
இன்னும் பல வழிகளில் வதை....
ஒருவன் சுயநலத்திற்கு மிருகபலி எதற்கு??
வேட்டையாடும் மிருகங்கள் பதில் வேட்டை தொடர்ந்தால்
இங்கு பல சந்ததிகள் அழிந்து போகும்.....!!
மிருகவதை விடுத்தது அவைகளில் சுதந்திரத்தில்
தலையிடாமல் இருப்பது நன்று...!!
Vanathin arasanai vettiyadi arasavaiyil
thol urithu thongavittu thannai singam endru
marthattikondan oruvan...!
Padhungi paayum puliyinai suttu pulitholinai
virithu makkalukku arivurai vazhangugiran kaavi udai
tharitha aanmegavadhi oruvan...!
Gambiramai nadamadum yanaiyinai pidithu
adhan thandhangalai aruthu vanigam seigiran
viyabari oruvan...!
Marakilaiyil thaavum kurangugalai pidithu
vithai kaati pizhaikiraan koothadi oruvan...!
Innum pala vazhigalil vadhai...
Oruvan suyanalathirku mirugabali edharku??
Vettaiyadum mirugangal badhil vettai thodarndhal
ingu pala sandhadhigal azhindhu pogum...!!
Mirugavadhai viduthu avaigalin sudhandhirathil
thalaiyidamal irupadhu nandru...!!