Thursday, July 30, 2015

பழையன கழிதலும் புதியன புகுதலும் (Pazhaiyana kazhidhalum Pudhiyana pugudhalum)




"பழையன கழிதலும் புதியன புகுதலும்" இந்த வாக்கியத்தினை தவறாக புரிந்து...
புதியதோர் நட்பு  முளைக்கையில் உடன் நின்ற நட்பை  துறந்து.....
இங்கே வாழ பழகுகிறார்கள்.....
வாழ பழகும் அவர்களோ நட்பை வேறுபடுத்தி பார்க்க....
வேறுபாட்டினையும் கடந்து  இங்கே... 
அவரது துன்பங்களை ஒன்றாக  பகிர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய  
உள்ளங்களை  மறந்து....
வேற்று பாதையில் வளம் வர,இன்று பழைய  நட்பின் அன்பு 
சலித்தமையல் புதிய நட்பை உறவாடும் முன்....
கடந்து வந்த  கால நினைவுகளை மறக்கலாமா???
மறந்து இன்று  வீணாய்  கண்முன்னே நடிக்கலாமா???
இத்தகைய  விந்தையான வட்டத்தில் வளம் வருகிறேன் 
தினமும் செய்வது அறியாமல் புன்னகைத்து  கொண்டு....!!!



"Pazhaiyana kazhidhalum Pudhiyana pugudhalum" 
indha vaakiyathinai thavaraga purindhu....
pudhiyadhor natpu mulaikaiyil udan nindra natpai thurandhu....
ingaae vaazha pazhagugiragal...
vaazha pazhagum avargalo natpai verupaduthi paarka....
verupatinaiyum kadandhu ingae...
avaradhu thunbangalai ondra pagirndhu avargaluku aarudhal kooriya ullangalai marandhu....
vetru paadhaiyil valam vara...
indru pazhaiya natpin anbu salithamaiyal pudhiya natpai uravadum mun...
kadandhu vandha kaala ninaivugalai marakalama????
marandhu indru veenai kanmunnae nadikalama???
ithagaiya vindhaiyana vattathil valam varugiraen
dhinamum seivadhu aariyamal punagaithu kondu.....!!


Monday, July 27, 2015

நினைவலைகள் ஓயாது





இவர் பிறக்கும்  பொழுது  அறியவில்லை இவர்  பல இளைஞர்களின்
வழிகாட்டியாக  திகழ்வார்  என்று ....
இளைஞர்களை இந்தியாவின்  முதுகெலும்பு  என கூறி  அனைவரிடத்திலும்
இவர்  ஊக்கம்  அளித்தார் .....
இந்த  தமிழன்  நாட்டின் வளர்ச்சிக்காக  அரும்பாடு பட்டார் ....
கணவு காண  சொன்ன  இந்த மனிதர்  இன்று  கனவின்  நினைவாய்
இயற்கை  எய்தினார்....
காலம் உள்ளவரை  இவர் புகழ் பாடும்  இவரின் அரும் செயல்கள்.....
இந்த  விஞ்ஞானி  ஆற்றிய  சாதனைகள்  பல....
அக்னி சிறகுகள்  இவரின்  சிந்தனைகள்  போற்றும் காவியம் .....
இவர்  பெற்ற  விருதுகள்  பெருமிதம்  கொள்ள காரணம் இந்த  தூயவனின் கரங்களில் தவழ்ந்தமையால்.....
தனது  இறுதி  மூச்சு உள்ளவரை  நாட்டின்  வளர்ச்சிக்காக  தனது சிந்தனகளை மக்களுக்கு எடுத்துரைத்த  மாமேதை இவர் .....
அக்னி  சிறகுகள்  விரித்து இன்று  வான்பறந்த  இந்த மாமனிதர்...
அனைவரின்  மனதில் நீங்கா  இடம் கொண்டு....
அனைவரின் உள்ளத்திலும்  வாழ்வார்  என்நாளும் ....!!
இவரை  பெற்றதால்  பெருமிதம் கொண்ட  தமிழ்த்தாய்  இன்று  நேதிரங்களின் நீர் இறைத்தபடி காட்சி அளிக்கிறாள் ....!!

ஐயா நீங்கள்  ஆற்றிய பங்களிப்பு  இணையற்றது...
வாழும் காலம் யாவும்  உங்கள்  புகழ்  பாடும்  இந்திய  தேசம் ...!!



Ivar piraku bozhudhu ariyavillai ivar pala ilaignargalin
vazhikaatiyaga thigazhvaar endru....
ilaignargal India vin muthugelumbu ena kori anaivaridathilum ivar ookam alithar...
indha tamizhan naatin valarchikaga arumpaadupataar....
kanavu kaana sonna indha manidhar indru kanavin ninaivaii iayarkai aeidhinar....
kaalam ulavari ivar pughal paadum ivarin arum seiyalgal....
indha vignyani aatriya saadhanigal pala....
agni siragugal ivarin sindhanigal potrum kaaviyam....
ivar petra virudhugal perumidham kolla karanam indha thooyavanin karangalil thavazhndhamaiyal...
thanadhu irudhi moochu ulavarai...
naatin valarchikaga thanadhu sndhanigalai makalauku eduthuratha mamaedhai ivar....
Agni siragugal virithu indru vaan parandha indha manidhar...
anaivarin umanadhil neenga idam kondu...
anaivarin ullathilum vaazhvar ennalum...!!
ivari petradhil perumidham konda tamizhthaai indru nethirangalil neer iraitha badi kaatchi alikiral...!!


Aiyaa neengal aatriya panaglipu inaiyatradhu....
vaazhum kaalam ulavari ungal pugazh paadu  inda INDIA desam...!!

Saturday, July 25, 2015

என் நட்பின் தாய் இவள் இவள் நட்பின் சேய் நான்



sirandha vilasam amaindhar pol "EN" vaazhkai thodangiyadhu engo
kaloori ennum kaatil "NATPIN"  vaasam veesakandaen....
ival paasathil unarndhaen "THAAI(in)" anbai natpin
vadivil thigazha "IVAL" pondra sondham kidaika
en kaalgal vaan paraka "IVAL" natpu siragugalaii
udhava sutrithirindhaen "NATPIN" saranalaiyathil
irundhum meendum thaaiyai thedum "SEI" pola ivalidam
anbin adaikalam puga meendum thediselgiraen "NAAN" anbin
koondil agapada....!!!

சிறந்த விலாசம்  அமைந்தார் போல்  "என்" வாழ்க்கை  தொடங்கியது எங்கோ  
கல்லூரி  என்னும் காட்டில் "நட்பின்" வாசம்  வீசகண்டேன் ....
இவள் பாசத்தில் உணர்ந்தேன் "தாய்"(இன் ) அன்பை நட்பின் 
வடிவில் திகழ "இவள்" போன்ற  சொந்தம் கிடைக்க 
என் கால்கள்  வான்  பறக்க "இவள்"  நட்பு  சிறகுகளாய் 
உதவ  சுற்றித்திரிந்தேன்  "நட்பின்" சரணாலையத்தில் 
இருந்தும்  மீண்டும் தாயை தேடும் "சேய்" போல  இவளிடம்
அன்பின் அடைக்களம்  புக  மீண்டும்  தேடிச்செல்கிரேன் "நான்" அன்பின் கூண்டில்  அகப்பட....!!





tamizh avamanam alla adaiyalam


குமரி கண்டத்தின்  மீதி சுவடு....
தமிழ்  பேசும் சாம்ராஜ்யம்  கடலுக்கு அடியில்  அமைதியாய் உறங்க ....
மறைந்து போன  தமிழர்  பெருமை அதை...
மறந்து போன தமிழரின் உள்ளம்....
இன்று  தமிழில் பேச  வெட்கப்படும்  கயவர்களால்....
புதையுண்ட  பெருமைகள்  யாவும்  புதையுண்டே  கிடக்கின்றன....
அவை கதிரவனின் ஒலியினை காணாது  அமைதியாய்  நீருக்கடியில்.....
தமிழில் பேச  பெருமை கொள்  தமிழா....
தமிழ் அவமானம் அல்ல அது உன் அடையலாம்...

தமிழில்  பேச பெருமை படுவோம்....!!!